Posts

Shwaas

Image
Shwaas - சுவாசம்  சிறந்த மராத்தி படங்கள் குறித்து தேடியபோது கிடைத்தது ( http://www.storypick.com/marathi-movies/ ).  படத்தில்   குருடாக   , மாற்றுத்திறனாளியாக போகும் பரசுராம் விசரே எனும் சிறுவனை பற்றியது . படம் மருத்துவ உலகம் ஒரு  நோயாளியை பார்க்கும் கோணம் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.  பார்வையில்லாதவர்களின் வாழ்க்கை பற்றி ராஜபார்வை, காசி  ,Black, ஒப்பம் ஆகிய படங்களில் பார்த்திருக்கிறேன். இந்த  படத்தில் நாளை பார்வை பறி போகப்போகிறது என்ற பயம் , படம் பார்க்கும் நமக்கும் பற்றிக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. படத்தில் தாத்தா , மருத்துவர் ,சமூகசேவகி, சிறுவனின் அம்மா  அனைவரையும் நாம் எங்காவது  பார்த்துஇருப்போம். படத்தின் youtube  லிங்க் தமிழ் subtitile உடன் 

முதல் பதிவு - நண்டு

Image
நண்டு கடந்த  2013ம்  ஆண்டு  இறுதியில் , இயக்குனர்  மஹேந்திரன்  அவர்களின் "சினிமாவும் நானும் " புத்தகத்தை  படித்தேன் .  அதில் நண்டு திரைப்படம் குறித்து சில செய்திகள் இருந்தன.   பின் நேற்று இரவு நண்டு  திரைப்படம் பார்த்தேன்.  மனம் சிறிது  பாரமாக உணர்கிறேன் . படத்தில் ராம் குமார்  ஷர்மா வாழ்ந்த  லக்னோவையும் , சீதா வாழும் சென்னையும்  அழகாக காட்டியுள்ளார்கள்.படத்தில்  வரும் ராம் குமார் ஷர்மாவின் குடும்பத்தார் அனைவரும் நன்றாக நடித்தியிருக்கிறார்கள். படத்தின் கடைசி 20 நிமிடம் அருமை. ஒரு படம் வெளிவந்து 36 ஆண்டுகள்  கழித்து அதை பற்றி பேசுவதுதான் அதன் வெற்றி என நினைக்கிறன் . படம் யூடூப்பில்  கிடைக்கிறது.